மீண்டும் இணைகிறதா விக்ரம் மூவர் கூட்டணி.. வினோத் போடும் திட்டம்!

புதன், 13 செப்டம்பர் 2023 (14:45 IST)
நடிகர் கமல்ஹாசன் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அவர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை விரைவில் முடிக்க உள்ள கமல் அடுத்து பிராஜக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்.

இதன்பிரகு கமல் நடிப்பில் வினோத் இயக்கும் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. முதலில் இந்த படத்துக்காக ஹெச் வினோத் விவசாயிகள் சம்மந்தப்பட்ட கதையை சொல்லி கமல்ஹாசனிடம் சம்மதம் வாங்கியதாக சொல்லப்பட்டது. முதலில் அந்த கதைக்கு ஓகே சொன்ன கமல், இப்போது அந்த கதையில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ராணுவத்தை பின்னணியாக கொண்ட கதையை இப்போது கையில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் கமலுடன் ஏற்கனவே விக்ரம் படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்