ஹாலிவுட் இயக்குனராகும் ராஜமௌலி; கைக்கோர்த்த ஜேம்ஸ் கேமரூன்!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (13:19 IST)
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த ஜேம்ஸ் கேமரூன் அவரை ஹாலிவுட் படம் எடுக்க அழைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் எண்டிஆர், ராம்சரண் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்த இந்த படம் தற்போது கோல்டன் க்ளோப், ஆஸ்கர் உள்ளிட்ட பல உலக விருது விழாக்களில் போட்டியிட்டு வருகிறது.

சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட ஹாலிவுட் இயக்குனர்கள் ராஜமௌலியை பாராட்டியுள்ளனர்.

அதில் ராஜமௌலியுடன் ஜேம்ஸ் கேமரூன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆர்.ஆர்.ஆர் படத்தை கண்டு தான் வியந்ததாக ஜேம்ஸ் கேமரூன் சொல்ல, அவரது மனைவி ‘இவர் அந்த படத்தை முதன்முறையாக பார்த்தபோது குழந்தையை போல உணர்ந்தார். தொடர்ந்து இரண்டு முறை படத்தை பார்த்தார்” என்று கூறுகிறார்.

படத்தில் இசையை கையாண்ட விதம் குறித்தும், கீரவாணியின் இசை குறித்தும் வியந்து பேசிய ஜேம்ஸ் கேமரூன், ஹாலிவுட்டில் படம் இயக்க விருப்பமிருந்தால் சந்தித்து பேசலாம் என்றும் ராஜமௌலியிடம் கூறியுள்ளார். இதனால் விரைவில் ராஜமௌலி ஹாலிவுட் படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்