படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.
இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக டிஸ்னி ஸ்டுடியோ இணைய, ஜேம்ஸ் கேமரூன் படத்தை வழங்குகிறார். இது சம்மந்தமான போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.