எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

Siva

திங்கள், 8 ஜூலை 2024 (19:11 IST)
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஒரு படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது,

ஏற்கனவே இந்த படத்தில் ஒரு சில இந்திய நட்சத்திரங்களும் ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் நாசர் இணைந்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் நாசர் இந்த படத்தில் நடிகராக கமிட்டாகவில்லை என்றும் நடிப்பு பயிற்சி செய்து கொடுக்கும் பயிற்சியாளராக சேர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாட்டில் நடைபெற இருப்பதால் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே நட்சத்திரங்கள் அனைவருக்கும் நடிப்பு பயிற்சி, வசன உச்சரிப்பு ஆகியவை இங்கேயே சொல்லிக் கொடுத்து அழைத்துச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நாசர் இந்த படத்தில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் நடிப்பு பயிற்சியும் வசன உச்சரிப்பு பயிற்சியும் கொடுப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்