’இங்க நான் தான் கிங்’: மாஸ் பஞ்ச் வசனத்துடன் வெளியான ‘ஜெயிலர்’ வீடியோ..!

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (18:38 IST)
ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அதில் ’இங்கு நான் தான் கிங்’ என்ற பஞ்ச் வசனத்துடன் இருப்பது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. 
 
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
முதல் கட்டமாக ’காவாலா’ என்ற பாடல் வெளியான நிலையில் இரண்டாவது சிங்கள் பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதில் மாஸ் பஞ்ச் வசனத்துடன் கூடிய ரஜினியின் வசனம் இருப்பதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்