''ஜெயிலர் படம் பற்றி கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த இவ்வளவு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வியாழன் அன்று வெளியான நிலையில் ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இந்த நிலையில் ஜெயிலர் படம் பற்றி கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இன்று கூறியுள்ளதாவது: இந்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ''இப்படத்தில் நடித்ததை நல்லதாக ஃபீல் பண்ணுகிறேன்.ரொம்ப தேங்ஸ் சொல்லுகிறேன…ரஜினி சாருக்கும் நெல்சன் சாருக்கும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சாருக்கும் மற்றும் எல்லா தமிழ் மக்களுக்கும் என்னோட நன்றி… ஜெயிலர் படத்தை மைசூரில் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது'' என்றார்.
ஒரே படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள் நடித்தது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் ''இது ஒரு பெரிய வாய்ப்பு… இது எல்லோருக்கும் கிடைக்காது…கிடைக்கும்போது விட்டற கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளதற்கு எதிர்பார்க்காத வரவெற்பு கிடைத்துள்ளது…. நான் பிறந்த ஊர் சென்னை, இங்குதான் படித்தேன். சினிமாவில் இருந்தாலும் 37 வருடத்திற்குப் பிறகு தமிழ்ப்படம் ஜெயிலர்… தற்போது, தனுஷுடன் கேப்டன் மில்லரில் நடித்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.