சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் அட்டகாசமான வில்லன் கேரக்டரில் நடித்தவர் விநாயகன். இவர் விமானப்படை வீரர்களுடன் போதையில் தகராறு செய்ததாகவும் கூறப்பட்ட நிலையில் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஹைதராபாத் சென்ற போது அவர் போதையில் இருந்ததாகவும் அப்போது விமான பாதுகாப்பு படையினரிடம் தகராறு செய்ததை அடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விமான நிலைய பாதுகாப்பு காவலர்கள் விநாயகனை தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்ததாகவும், நான் ஒரு தவறும் செய்யவில்லை வேண்டுமென்றால் சிசிடிவி வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று விநாயகன் தனது தரப்பில் விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.