ஜெயிலருக்கு 1000 இலவச டிக்கெட்டுகள்! 15 நொடிகளில் காலி! – ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (13:47 IST)
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சன் பிக்சர்ஸ் அறிவித்த இலவச டிக்கெட்டுகள் நொடிப்பொழுதில் விற்று தீர்ந்துள்ளது.



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள படம் “ஜெயிலர்”. இந்த படத்தில் தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிளான “காவாலா”, இரண்டாவது பாடல் “டைகர் கா ஹுக்கும்” ஆகியவை வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 28ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான நுழைவு டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய நிலையில் 1000 நபர்களுக்கு இலவச பாஸ் தருவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இன்று மதியம் 1 மணிக்கு இலவச பாஸுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில் 15 நொடிகளிலேயே 1000 பாஸ்களும் விற்று தீர்ந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. ஆடியோ வெளியீடு இலவச பாஸை பெற ரஜினி ரசிகர்கள் பலர் முண்டியடித்து காத்திருந்த நிலையில் டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்