650 கோடி ருபாய் பரிவர்த்தனையை மறைப்பு… டாப்ஸி& அனுராக் வீட்டு சோதனையின் பின் அதிகாரிகள் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (16:58 IST)
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் வீட்டில் வருமான வரிச்சோதனை நடந்து முடிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இன்றும் அந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இருவருமே தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்த நிலையில் இருவர் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சோதனை முடிந்துள்ள நிலையில் சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனை மறைப்பு சம்மந்தமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்