அஜித் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். ... விஜய் முதல்வராவார் , முக்கிய பிரபலம் பேட்டி

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (20:02 IST)
தமிழகத்தில் அரசியல் வேறு சினிமா வேறு என்று பிரித்துப் பார்க்கவே முடியாது . ஏனெனில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் எம்.ஜி.ஆர், சிவாஜி, காலத்திலிருந்தே தொடர்பு இருக்கிறது. ஏனெனில் எம்ஜிஆர், சிவாஜி , கருணாநிதி, ஜெயலலிதா , வரையாக வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.


 
எம்ஜிஆர் சிவாஜிக்குப் பிறகு ரஜினியும், கமல்ஹாசனும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். இதில் தற்போது இருக்கும் பிரபலங்களான அஜித், விஜய் இந்த விசயத்தில் அதிகம் பேசப்படுகிறது.
 
அஜித் அரசியல் வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். ஆனால் விஜய்க்கு அரசியல் ஆசை இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் முன்னாள் PRO பி.டி.செல்வகுமார் அண்மையில் பேட்டியளித்துள்ளார்.
 
அதில் அவர் என்னுடைய கணிப்பின் படி விஜய் தமிழக அரசியலுக்கு வருவார். அது அவருக்கே தெரியாது. முதல்வராகும் வாய்ப்பு அவருக்கு இருக்கின்றது.
 
அஜித் ஒதுங்கினாலும் கூட காலம் அஜித்தையும் அரசியலில் கொண்டு வந்து சேர்க்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்