''ஜெயிலர் படம் வெற்றி''....நெல்சனுக்கு வாழ்த்து கூறிய நடிகர் விஜய்

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:45 IST)
நடிகர் விஜய்,  ஜெயிலர் படம் வெற்றியடைந்ததற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம்      நேற்று   உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு  வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர்  நெல்சன் பீஸ்ட் படத்திற்குப் பிறகு ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளார். இதற்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த  நிலையில்,  நடிகர் விஜய்,  ஜெயிலர் படம் வெற்றியடைந்ததற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும், ஜெயிலர் படத்தின் கதையை நடிகர் ரஜினியிடன் கூறச் சொன்னதே விஜய்த்தான் என்று ஜெயிலர் பட ஆடியோ விழாவில் நெல்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்