கமலின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க விரும்பும் ஐசரி கணேஷ்!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (08:47 IST)
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தற்போது வரிசையாக படங்களை தயாரித்து வருகிறார்.

கமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’வேட்டையாடு விளையாடு’ 2006 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுக்கள் தற்போது அடிபட்டு வருகின்றன. இந்த படத்தை கமலின் நண்பரும் வேல்ஸ் கல்வி நிறுவன உரிமையாளருமான தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்காக இயக்குனர் கௌதம் மேனனுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி அவரையே இயக்க சொல்லி கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் இல்லாவிட்டால் வேறு இயக்குனரை வைத்து இயக்குவதற்கும் ஐசரி கணேஷ் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

வேட்டையாடு விளையாடு படத்தைத் தயாரித்த மாணிக்க நாராயணன் அவர்களுக்கு படம் பெரிய ஹிட் ஆனாலும் நஷ்டம் அடைந்தார் என்று அவரே பல பேட்ட்டிகளில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்