விஜய் தற்போது நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அவரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார், தயாரிக்கப் போவது யார் என்பதெல்லாம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கோட் படத்தோடு விஜய் சினிமா கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசியல் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவல் வதந்தி என திரை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். விஜய்யின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.