மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட சிக்கலுக்கு காரணம் இதுதானா?

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (11:18 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படம் நாளை வெளியாகயுள்ள நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் வலை தள பக்கத்தில் பத்து நாட்களுக்கு முன்பாகவே அறிவித்திருந்தனர்.

 
இப்படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு நடைபெற்று அதன்பின் அதிலிருந்தும் தீர்வு கிடைத்து படம் எந்தப் பிரச்சனையும்  இல்லாமல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் விலங்குகள் நல வாரியம் படத்திற்கு தடையில்லாச்  சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படம் வெளியாகுமா? என்ற அச்சத்தை ரசிகள் மத்தியில் ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கலுக்கு காரணம், இந்த வருடத் துவக்கத்தில் விஜய், மெரினாவில் மாணவர்கள்  இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததுதான் என கூறப்படுகிறது. மேலும் 'மெர்சல்'  திரைப்படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கிற்கு, விலங்குகள் நல வாரியமும் ஆதரவு  கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், சமயம் வரும் போது காத்திருந்து 'மெர்சல்' படத்திற்கு இவ்வளவு  சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. எனவேதன் விஜய் நேரடியாக முதல்வரைச் சென்று சந்தித்து  பேசியதால்தான் தடைகள் விலகியதாகவும் கூறப்படுகிறது.
 
சமீப காலமாக விஜய் படங்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருவது அவருடைய ரசிகர்களிடையே கடும் கோபத்தை  ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்