கோலிவுட் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திரைத்துறையுலகினர், தியேட்டர் அதிபர்கள் ஆகியோர் தமிழக அரசின் அமைச்சர் , அதிகாரிகள் முன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் விரைவில் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு தயாரிப்பாளர் சங்கம் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் நீடிக்கும் என்று கூறியதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.
மேலும் திரைத்துறை நிர்வாகிகள் பேசும்போது அவர்களுடைய ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்வதால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும், அதிகாரிகள் கோபம் கொண்டதாகவும், இதனால் இந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவை நோக்கி செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.