நடிகர் கவுண்டமணி சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

வியாழன், 25 மே 2023 (17:05 IST)
தமிழ் சினிமாவில் 16 வயதினேலே படம் ரஜினி, கமல் மற்றும் பாரதிராஜா பல ஜாம்பவான்களை உருவாக்கியது போலவே கவுண்டமணி என்னும் நகைச்சுவை ஜாம்பவானையும் உருவாக்கியது. அதன் பின்னர் தனது உடல் மொழியாலும், கவுண்ட்டர் வசனங்களாலும் தமிழ் திரையுலகை ஆளுகை செய்ய ஆரம்பித்தார் கவுண்டமணி. 40 வயதுக்கு பின்னரே வாய்ப்புக் கிடைத்து அதன் பின்னர் அதன் மூலம் உச்சாணிக் கொம்புக்கு சென்றதில் எம் ஜி ஆருக்கும் கவுண்டமணிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.
 
கவுண்டமணி பெரிதாக ஊடகங்களில் நேர்காணல்கள் கொடுப்பதில்லை. அவரைப் பற்றி அவருடன் பணியாற்றிய சகக் கலைஞர்கள் சொன்னால்தான் உண்டு. அந்த வகையில் தற்போது கவுண்டமணியின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் , அவரின் சொத்து மதிப்பு ரூபாய் 40 முதல் 50 கோடி வரை சொத்து உள்ளது என தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்