உலகில் உள்ள ஊடகங்களின் மிகவும் கவனிக்கப்படுவது பிபிசி ஊடகம். இந்த ஊடகத்தின் சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில் பா.ரஞ்சித்தின் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவைச் சேர்ந்த கானா பாடகர் இசைவாணி இடம்பிடித்துள்ளார்.
வடசென்னையைச் சேர்ந்த இசைவாணி பிபிசி சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
ஆண்டுதோறும் சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பு வழங்கும் பெண்களைக் சிறப்பிக்கும் பொருட்டு பிபிசி சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிடும்.இந்த நிலையில், இந்த ஆண்டில் 100 பேரை பிபிசி தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தப் பட்டியலில் 100 இடங்கள் பிடித்தவர்களில் 4 பேர் பெண்கள்…அதில் இசைவாணி ஒருவர்தான் தமிழத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும் , இசைவாணி, அறிவாற்றல் , படைப்பாற்றல்,தலைமைத்துவம், தனித்துவ அடையாளம் ஆகிவற்றின் அடிப்படையில் இடம்பிடித்த 21 பெண்களில் இசைவாணி மட்டுமே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தெருக்குரல் அறிவு தனது டுவிட்டர் பக்கத்தில், @BBCWorld
வழங்கும் உலகின் டாப் 100 பெண்கள் பட்டியலில், நமது @tcl_collective
பாடகர், இசைவாணி இடம்பெற்றுள்ளார். பெருமகிழ்ச்சி மற்றும் நல்வாழ்த்துக்கள்
கலை மக்களுக்கானதே என முழங்கிடும் சமத்துவ மேடையை உருவாக்கிய @beemjiஅவர்களுக்கு நன்றிகள்