சூப்பர் டீலக்ஸ் படம் முன்கூட்டியே பத்திரிக்கையாளர்களுக்கான ப்ரீவியூ காட்சி வெளியிடப்பட்டதால் பெரும்பாலான இணையதளங்களில் இந்த படத்தின் விமர்சனம் நேற்றே வந்துவிட்டது. படத்தை பார்த்தவர்கள் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தை தெரிவித்து வரும் வேளையில் தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை பிரபல பத்திரிக்கை நிறுவனமான "நியூ யார்க் டைம்ஸ்" வெளியிட்டுள்ளது.
அதில் , படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை வெகுவாக பாராட்டியதோடு , சமந்தாவின் நடிப்பையும் அவரது கேரக்டரையும் வெகுவாக பாராட்டியுள்ளது நியூ யார்க் டைம்ஸ். விஜய்சேதுபதி, பகத் பாசில் என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் அற்புதமாக நடித்திருந்தபோதிலும் சமந்தாவின் கேரக்டரையும் அவரது துணிச்சலான நடிப்பையும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.