அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு வெளிநாட்டுக்கு செல்லும் இந்தியன் 2 குழு!

சனி, 4 பிப்ரவரி 2023 (09:55 IST)
இந்தியன் 2 படப்பிடிப்புக்காக தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுதான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது வாரிசு படம் ரிலிஸுக்கு தயாராகி வருவதால், ரிலீஸ் வரைக்கும் ஷங்கர் – ராம்சரண் படத்துக்கு பிரேக் விட்டுள்ளாராம் தில் ராஜு. இதனால் ஷங்கர் விருவிருப்பாக இந்தியன் 2 படத்தை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி வெளியீடாக இந்த படம் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போது முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் திருப்பதியில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்