லோகேஷ் கனகராஜூக்கு போன் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள்: பரபரப்பு தகவல்

வியாழன், 12 ஜனவரி 2023 (20:12 IST)
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு வருமானம் வரித்துறை அதிகாரிகள் போன் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கோவையில் இன்று வருமான வரித்துறை சார்பில் சிறந்த முறையில் வரி செலுத்தும் இளைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது 
 
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள லோகேஷ் கனகராஜூக்கு வருமான வரித்துறையினர் அழைப்பு விடுத்தனர்
 
இதில் கலந்துகொண்ட அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் வருமானவரித்துறைனர் போன் செய்தபோது முதலில் பயந்தேன் என்றும் அதன் பிறகு அவர்கள் விருது கொடுக்கப்படுவதாக அறிவித்ததும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இன்னும் 10 நாட்களில் தளபதி 67 படம் குறித்த அப்டேட் வரும் என்றும் அவர் கூறினார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்