வாரிசு படத்துல குஷ்புவக் காணோம்… வடிவேலு பாணியில் புலம்பும் ரசிகர்கள்!

புதன், 11 ஜனவரி 2023 (15:29 IST)
வாரிசு படத்தில் நடித்ததாக சொல்லப்பட்ட குஷ்பு ஒரு காட்சியில் கூட வரவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை சிறப்புக் காட்சியோடு வெளியாகி பரவலாக ரசிகர்கள் கொண்டாடி பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். படம் பெரும்பாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் படம் மெஹா சீரியல் போல உள்ளதாக கருத்துகளை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் படம் பார்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் ரசிகர்கள் “ஒரு சீனில் கூட குஷ்பு வரவில்லையே” எனக் கூறி வடிவேலு கிணற்றை காணோம் என சொல்வது போல ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

படத்தில் குஷ்பு ஒரு முக்கிய வேடத்தில் நடித்ததாக அவரே அறிவித்தார். பின்னர் வாரிசு இசை வெளியீட்டிலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்