இனி தளபதி 67 அப்டேட்கள் வரும்… வாரிசு பார்த்த பின் லோகேஷ் கருத்து!

புதன், 11 ஜனவரி 2023 (11:24 IST)
இன்று ரிலீஸ் ஆகியுள்ள வாரிசு திரைப்படத்தை ரசிகர்களோடு இணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்த்து ரசித்தார்.

வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை சிறப்புக் காட்சியோடு வெளியாகி பரவலாக ரசிகர்கள் கொண்டாடி பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை பார்த்தார்.

படம் பார்த்து வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது “தளபதி 67 படத்தின் அப்டேட் இனிமேல் அடுத்தடுத்து வெளியாகும். வாரிசு படம் ரிலீஸ் ஆகதான் காத்திருந்தோம்” எனக் கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோவாக ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த ப்ரோமோ எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இப்போது வாரிசு ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் அந்த டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்