பிக்பாஸ் வீட்டில் இந்த பார்முலா கைகொடுக்குமா சுஜா வருணிக்கு?

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (17:50 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் புதுவரவு மூன்றுபேர் அதில் ஒருவர் நடிகை சுஜா வருணி. இவர் வந்தது முதல் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். இவர் நேற்று பிக்பாஸிடம் தன் வாழ்க்கை குறித்து பேசினார். நீங்கள் வந்து 5 நாட்கள் ஆன நிலையில் எப்படி உணர்கிறீர்கள் என பிக்பாஸ் கேட்டார்.

 
அப்போது பதிலளித்த சுஜா, குடும்ப சூழ்நிலை காரணமாக 14 வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். முதல் படத்திற்கு பிறகு  வர்ணஜாலம் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடினேன். அதன்பிறகு தொடர்ந்து அதே போன்று குத்து பாடல் வாய்ப்புகளே வந்தது.  ஒரு கட்டத்தில் அதனை நிறுத்தி விட்டு தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக கூறினார்.
 
தொடர்ந்து தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருந்தாலும், சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை என்று கூறி கண் கலங்கினார். அதுமட்டும் அல்லாமல் ஐட்டம் டான்ஸ் என்று கூறாதீர்கள் என்று கூறினார். இப்படி பேசித்தான் ஓவியா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதே பார்முலா சுஜாவுக்கு கை கொடுக்குமா? பின்வரும் நாட்களில் பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்