லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்! மருத்துவமனை நிர்வாகம்

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (10:52 IST)
பழம்பெரும் பாடகரான லதா மங்கேஷ்கர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்திய சினிமாவில் மிகவும் முதுபெரும் பிண்ணனி பாடகிகளில் முக்கியமானவர் லதா மங்கேஷ்கர். இந்தி, பெங்காலி, தமிழ், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்க்க மருத்துவர்கள் குடும்பத்தினர் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்