பழம்பெரும் சினிமா பாடலாசிரியர் காமகோடியான் மறைவை அடுத்து இளையராஜா இரங்கல் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து பாடல்களை எழுதிய மூத்த பாடலாசிரியர் காமகோடியான் நேற்று வயது மூப்புக் காரணமாக உயிரிழந்தார். அதையடுத்து திரைத்துறையினருக்கு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தன் இசையில் பாடல்கள் எழுதிய காமகோடியனுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கவிஞர் காமகோடியான் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்பதைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு வரப்பிரசாதம் படத்தில் பணியாற்றிய போதே தயாரிப்பு மேலாளராக பணியாற்றியபோதே தெரியும். அப்போதே தனக்கு பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக தெரிவித்திருந்தார். நம்முடைய MSV அண்ணாவோடு நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். மேடைக் கச்சேரிகளில் காமகோடியான் எழுதிய மனிதனாயிரு என்ற பாடலை எம் எஸ் வி அவர்கள் பாடினார். என்னுடைய இசையமைப்பிலும் பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். அன்னார் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. அவரைப் பிரிந்துவாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். கவிஞரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.