சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு சிக்கலா?

Siva

புதன், 1 மே 2024 (09:09 IST)
இசைஞானி இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கூலி’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கூலி’ படத்தின் வீடியோ வெளியான நிலையில் அந்த வீடியோவில் இளையராஜா இசை அமைத்த ’வா வா பக்கம் வா’ என்ற பாடல் இசையை உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகவும் எனவே அந்த டீசரில் இருந்து இசையை நீக்க வேண்டும் அல்லது உரிய அனுமதி பெற வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

அவ்வாறு செய்யாத பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு அந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டி உள்ளது.

ரஜினி படம் என்று தெரிந்தும் இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்