இசைஞானி இளையராஜா பாடலுக்கு முழு உரிமையும் இசையமைப்பாளருக்கு தான் என வழக்கு ஒன்றில் வாதிட்ட சம்பவம் சமீபத்தில் பேசு பொருள் ஆனது. இந்த விவகாரம் குறித்து படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, பாடலுக்கு இசை எவ்வளவு பெரியதோ வரிகளும் அவ்வளவு பெரியது இதை புரிந்தவன் ஞானி, புரியாதவன் அஞ்ஞானி என இளையராஜாவை மறைமுகமாக தாக்கி பேசினார்.
இளையராஜாவை குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே பேட்டிகளை கொடுப்பது சரியல்ல என்றும் அவரை அடக்கிவைக்க ஆள் இல்லாததால் துள்ளிக்கொண்டு இருக்கிறார் என்றும் கங்கை அமரன் தெரிவித்தார். தன்னைத் தானே புகழ்ந்து பேசக் கூடியவர் கவிஞர் வைரமுத்து என்றும் எந்தெந்த நேரத்துல எங்கெங்க போய் ஜால்ரா அடிக்கணுமோ, அங்கெல்லாம் அடித்து நல்ல வசதியாக இருக்கிறார் வைரமுத்து என்றும் அவர் விமர்சித்தார்.
இனிமேல் இளையராஜாவை பற்றி குற்றம் குறைகளை சொல்லிக்கொண்டு மரியாதை இல்லாம பேசினால் அதற்கான விளைவுகளை வேறமாரி சந்திக்க நேரிடும் என்று கங்கை அமரன் எச்சரித்துள்ளார். உங்கள் பேச்சை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் இளையராஜாவை பத்தி பேசாம வாயை பொத்திக்கிட்டு இருக்கனும் என கங்கை அமரன் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.