இது நம்ம ஆளு படத்திற்காக சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சஞ்சய்குமார் லால்வானியிடம் 1.9 கோடியை கடனாக வாங்கியிருந்தது. இந்த கடனை 36 சதவீத வட்டியுடன் திருப்பித் தருவதாகவும், படத்தின் வடஆற்காடு, தென் ஆற்காடு விநியோக உரிமையை லால்வானிக்கு தருவதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மீறியதால், வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் படத்தை வெளியிட நீதிபதி இடைக்கால தடை விதித்திருந்தார். அதனால், இது நம்ம ஆளு வெளியாகுமா என்ற கேள்வி இருந்தது.
ஆனால், வட ஆற்காடு, தென் ஆற்காடு தவிர மற்ற பகுதிகளில் படம் திட்டமிட்டபடி வெளியானது. காலை சிறப்புக்காட்சிக்கே ரசிகர்கள் திரையரங்கில் அலைமோதினர். தெறி படமும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் பகுதியில் வெளியாகவில்லை. ஆனால், பிற இடங்களில் வெளியாகி வெற்றி பெற்றது. தெறியைப் போலவே இது நம்ம ஆளும் வெளியாகியுள்ளது.