சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷின் இசை பக்கபலமாக இருந்தது.
இந்நிலையில், சுதா கொங்கரா ஷாந்தனு மற்றும் காளிதாஸ் ஜெயராம் இயக்கத்தில் தங்கம் என்ற படம் வெளியானது. இப்படத்தில் மூன்றாம் பாலினத்தவராக காளிதாஸ் நடித்து திறமையை நிரூபித்தார்.
இப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவுக்கும் பாராட்டுகள் குவிந்தது. இந்நிலையில் கார்த்தி நடிப்பில் சுதா கொங்கரா ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
மேலும் இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இணையதளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அநேகமாக அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகாமால் எனத் தெரிகிறது.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சுல்தான் படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.