நடிகை பார்வதிக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ரசிகர்கள்

செவ்வாய், 2 ஜனவரி 2018 (17:43 IST)
பெண்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக மம்முட்டி படத்தை மேற்கோள் காட்டிய நடிகை பார்வதிக்கு எதிராக மம்முட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 
கேரள சர்வதேச திரைப்பட விழாவில், நடிகை பார்வதி சினிமாவில் பெண்கள் தவறாக சித்திரிக்கப்படுவதை மம்முட்டி நடிப்பில் வெளியான கசபா படத்தை மேற்கோள் காட்டி பேசினார். இதைத்தொடர்ந்து மம்முட்டி ரசிகர்கள் நடிகை பார்வதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
 
நடிகை பார்வதிக்கு மிரட்டல் செய்தி அனுப்பிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நடிகை பார்வதி, பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் மை ஸ்டோரி என்ற படம் வெளியாக உள்ளது. இதன் பாடல்கள் யூடியூபில் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் மம்முட்டி ரசிகர்கள் தனது வெறுப்பை சமூக வலைதளங்களில் காட்டியுள்ளனர். பார்வதி நடித்துள்ள மை ஸ்டோரி படத்தை பார்க்க போவதில்லை என்றும், இதன்மூலம் அவருக்கு சரியான பாடம் கற்பிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
 
யூடியூபில் மை ஸ்டோரி படத்தின் பாடலுக்கு 53,000 டிஸ் லைக் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மம்முட்டி ரசிகர்கள் பார்வதிக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நடிகர் பிரித்விராஜ் மன்னித்துவிடுங்கள் நாங்கள் உங்களை வெறுக்கவில்லை, அடுத்த படத்தில் பார்வதி இல்லாமல் இருப்பது நல்லது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்