எல்லாம் முடிந்தது! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா?

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (22:33 IST)
பிக்பாஸ் வீட்டில் இன்று போலீஸ் விசாரணை செய்து எந்தவித பிரச்சனையும் இல்லை என்ற தகவல் வெளிவந்த ஒருசில நிமிடங்களில் ஓவியா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிர்ச்சி தரும் அதே நேரத்தில் உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.



 
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா காரில் வெளியே செல்லும் ஸ்டில் ஒன்றும் சற்று முன் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எல்லாம் முடிந்தது, வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா என்று பலர்  டுவீட் செய்து வருகின்றனர்.
 
ஓவியா வெளியே சென்றது உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அதிகாரபூர்வமாக நாளை தான் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் முன்னணி செய்தியாளர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்