காதல் குகைக்கு தனியாக அனுப்பப்பட்ட- ஹர்ஷ்!

J.Durai

புதன், 22 மே 2024 (16:02 IST)
சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சியின் புதிய எபிசோடில் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உள்ளே உள்ள ஸ்பிளிட்ஸ் வில்லா போட்டியாளர்களுக்கும் செம ட்விஸ்ட் காத்திருந்தது.
 
காதல்,கேலி விளையாட்டுக்களுடன் சலசலத்த அந்த வில்லா திடீரென பேக் ஸ்டாபிங், துரோகம் நிறைந்த நிகழ்ச்சியாக மாறிவிட்டது. காஷிஷ் மற்றும் ஆடியும் ஒரு போட்டிக்குத் தயாராகினர்,ஆனால் ஆரக்கிள் பற்றிய ஆடியின் தயக்கம் அவர்களின் தொடர்பை பாதிக்கும் வகையில் அச்சுறுத்தியது.
 
சவாலான நேரத்தில், தனுஜ் ஸ்ப்ளிட்ஸ்வில்லன்களை அவர்களின் டேட்டிங் பற்றி பகிர்ந்து கொண்டார்.
 
இஷிதாவிடம் சச்சின் அளித்த வாக்குமூலம் திக்விஜையை கவலையடையச் செய்தது. ​​திவ்யான்ஷுடன் தேவாங்கினி தனது காதல் அலைகளை மீண்டும் எழுப்பினார். இந்தக் காதல் பேச்சுக்களுக்கு மத்தியில், ஜஷ்வந்துடனான தனது பிணைப்பைப் பற்றி அக்ரிதி உன்னதி தனது கருத்துக்களை மறைமுகமாக சொன்னதாகக் குற்றம் சாட்டியதால் அங்கே ஒரு டிராமா அரங்கேறியது. இதனால் தனுஜுக்கு யாரை வெளியேற்றுவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
 
"லம்பி குடாய்" சவாலின் போது, ​​ஒரு ரகசிய துப்பு மூலம் பெட்டியை திறக்க அணிகள் ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. ருரு தன்னைத் தியாகம் செய்ய மறுத்து, திக்விஜய் மற்றும் உன்னதியுடன் விரிசலை உருவாக்கினார். இதற்கிடையில், ஆடி, அனிக்கா மற்றும் காஷிஷ் வெற்றியைப் பெற்றனர்.
 
அனிக்காவின் தியாகம் வீண் போகாமல் அவரது அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.
 
இந்த எபிசோடிலேயே இதுதான் செம ஹைலைட்டான விஷயமாக மாறி ரசிகர்களை அசர வைத்தது. ​​ஹர்ஷ் மற்றும் ருஷாலியின் அறைக்கு வெளியே ஒரு மர்மமான பெட்டியை மிஸ்சீஃப் மேக்கரான உர்ஃபி ஜாவேத் வைத்திருந்தார். 
 
அது ஹர்ஷுக்காக பிரத்யேகமாக, வைக்கப்பட்ட நிலையில், அதனை பார்த்து ரொம்பவே அப்செட் ஆகி விட்டார். உர்ஃபி ஜாவேதின் குறிப்புடன் வந்த அந்த மர்ம பெட்டியால் காதலர்களான இருவருக்கும் இடையே அவர்களது பிணைப்பு மற்றும் எதிர்காலம் பற்றிய கேள்விகளை எழுப்பியது.
 
உரோஃபி ஜாவேத் கொடுத்த டாஸ்க்கில் ஹர்ஷை தனியாக காதல் குகைக்கு வரவழைத்து, ஸ்பிளிட்ஸ்வில்லன்களிடையே பிரச்சனையை கிளப்புவதாக அந்த போர்ஷன் செம ட்விஸ்ட்டாக அரங்கேறியது.
 
ஹர்ஷின் முன்னாள் காதலியான சுபி, தனது காதலை புதுப்பிக்கும் முயற்சியில் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளே நுழைந்தார். சன்னி லியோனிடம் தனது காதலர் ஹர்ஷ் தனியாக லவ் டென்னுக்கு சென்றது பற்றி ருஷாலி கூற, தனியாக சென்று அங்கே என்ன செய்கிறார் என்றும் கடந்த முறை நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே லவ் டென்னுக்கு சென்றிருந்தீர்கள் அப்போது என்ன செய்தீர்கள் என அனைவர் முன்பும் சொல்ல சொன்னார்.
 
அதற்கு வெட்கப்பட்ட ருஷாலி இருவரும் நன்றாக டேட்டிங் செய்தோம். எங்கள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணமாக அந்த பொழுது இருந்தது என்று தான் ஹர்ஷ் உடன் கழித்த நேரத்தை அனைவர் மத்தியிலும் ருஷாலி பகிர்ந்து கொண்டார். யாரும் இல்லாத தனி அறையில் என்ன செய்யப் போகிறோம் என விரக்தியுடன் ருஷாலியிடம் ஓவர் சீன் போட்டு சென்ற ஹர்ஷ் அந்த குகையில் தனது முன்னாள் காதலி சுபியை பார்த்து ஷாக் ஆகி விட்டார்.
 
ருஷாலியை கழட்டி விட்டு விட்டு ஹர்ஷ் சுபியுடன் சென்று விடுவாரா என ரசிகர்கள் பதைபதைப்புடன் பார்க்கும் அளவுக்கு இந்த எபிசோடு உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த பயத்தையே சன்னி லியோன் முன் ருஷாலியும் தெரிவித்தார். ஹர்ஷை எப்படியாவது மடக்கி தன்னுடைய காதலை புதுப்பிக்க காதல் குகையில் காத்திருந்த சுபி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், ஹர்ஷ் அவரிடம் மன்னிப்பு கேட்டார். கடைசி வரை  உறுதியாக நின்று, ருஷாலி மீதான தனது காதலை அறிவித்தார்.
 
டோம் அமர்வில், ருஷாலி தனியாக நின்று, உணர்ச்சிவசப்பட்டு, ஹர்ஷுடன் தன் எதிர்காலம் குறித்து சந்தேகம் கொண்டாள். சன்னி லியோன் ருஷாலிக்கு சில ஆலோசனைகளை வழங்கினார், "உங்கள் காதல் வலுவாக இருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் காதலர் உங்களிடம் வந்து சேர வேண்டும் என்றால் அது அப்படியே நடக்கும். இல்லை என்றால் அவர் உங்களுக்கானவர் இல்லை என்றார். ஹர்ஷ் ருஷாலிக்காக நின்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
 
டோம் அமர்வு சூடுபிடித்ததால், பவர் டைனமிக்ஸ் மாறியது. வெற்றி பெறும் அணி மற்றும் ஐடியல் போட்டிகள் தலா இரண்டு ஸ்பிளிட்ஸ்வில்லன்களை காப்பாற்ற முடியும். ஒரு திருப்பம் உன்னதிக்கு ஆரக்கிளுக்குச் செல்ல ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கியது, மேலும் அவர் திக்விஜய்யைத் தேர்ந்தெடுத்தார். உன்னதி மற்றும் திக்விஜய் ஐடியல் மேட்ச் என்று அறிவிக்கப்பட்டு, தேவாங்கினி மற்றும் திவ்யான்ஷை வெளியேற்றினர்.
 
அடுத்த வாரம் மேலும், சண்டைகள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த டேட்டிங் ஷோவை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்