நயன்தாரா வழியில் ஹன்சிகா

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (12:21 IST)
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை நயன்தாரா.



இவர் பெரிய கதாநாயகர்களுடன் வருடத்திற்கு ஒரு படம் எடுப்பது இரண்டு அல்லது மூன்று படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். சமீபகாலம் வரை இறங்குமுகமாக இருந்த திரிஷாவை  96 படம் அவருடைய மார்க்கெட் அந்தஸ்தை மேலும் உயர்த்தியது. இவரும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இனிமேல் நயன்தாரா திரிஷா வழியில் ஹன்சிகாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க தயாராகிவிட்டார். நயன்தாரா திரிஷா ஆகிய இருவரையும் விட ஹன்சிகா குறைந்த சம்பளம் வாங்குவது பட அதிபர்களின் பார்வை ஹன்சிகாவின் பக்கம் திரும்பியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்