ரகசியமாக நடந்த ஹன்சிகா போட்டோஷூட்?

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (17:08 IST)
‘சங்கமித்ரா’ படத்துக்காக ஹன்சிகாவை வைத்து போட்டோஷூட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
 


 

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் மிகப்பெரும் வரலாற்றுப் படம் ‘சங்கமித்ரா’. ஆர்யா, ஜெயம் ரவி ஹீரோக்களாக நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்துக்காக, தனிப் பயிற்சியாளரை வைத்து வாள் சண்டை கூட கற்றார் ஸ்ருதி. ஆனால், இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக ஸ்ருதி அறிவிக்க, ‘இல்லையில்லை… நாங்கள் தான் அவரைத் தூக்கினோம்’ என்றது படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம்.

அவருக்குப் பதில் அனுஷ்கா, நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடல் எடையைக் காரணம் காட்டி அனுஷ்கா மறுத்துவிட, நயன்தாரா கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் தயாராக இல்லை. எனவே, ஹன்சிகா இந்தப் படத்தில் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், ஹன்சிகாவை வைத்து ரகசிய ஃபோட்டோஷூட் நடத்தியிருக்கிறார் சுந்தர்.சி. எனவே, ஹன்சிகா தான் ‘சங்கமித்ரா’வின் நாயகி என்பது உறுதியாகியிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்