இந்நிலையில் 2015 ஆம் ஆண்டே அவர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட மின்மினி திரைப்படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பவை. முதல் பாதியில் கதாபாத்திரங்கள் குழந்தைகளாகவும், இரண்டாம் பாதியில் அவர்கள் வளர்ந்த பின்னரும் கதை நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவ காட்சிகளை 7 ஆண்டுகளுக்கு முன்னர் படமாக்கிய நிலையில் படத்தில் நடித்த குழந்தைகள் வளருவதற்காக 7 ஆண்டுகள் காத்திருந்தனர். குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் அந்த படத்தின் மீதக் காட்சிகள் கடந்த ஆண்டு முடிந்தது.
இதையடுத்து சமீபத்தில் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கிடையில் இதே பெயரில் 2020 ஆம் ஆண்டே ஒரு படம் சென்சார் செய்யப்பட்டு விட்ட நிலையில், அதே பெயரில் படம் ரிலீஸானதால் தனக்கு 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மின்மினி படத்தின் மற்ற பிஸ்னஸ்கள் பாதிக்கபப்ட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.