நயன்தாராவுக்காக காத்திருக்கும் பெரும் கதாநாயகர்கள்!

திங்கள், 10 செப்டம்பர் 2018 (11:18 IST)
தமிழ் சினிமாவில் 13 வருடங்களாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா, இவர் தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும், மலையாளத்திலும் புகழ் பெற்ற  நடிகையாக வலம் வருகிறார்.
இவரது சமீபத்திய படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். இதனால் நயன்தாராவின் கால்ஷீட்டுக்கு பெரிய கதாநாயகர்களும் காத்து இருக்கிறார்கள். கடந்த வருடம்  டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய 3 படங்கள் அவர் நடிப்பில் வெளியானது. இந்த வருடத்தில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் தெலுங்கில் ஜெய்சிம்ஹா ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்துள்ளன. மேலும் விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்துள்ளார்.
 
இதுதவிர நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாகிறது.  மேலும் கொலையுதிர் காலம் மற்றும் ராஜேஷ் இயக்கும் படம் மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார்.  இதனால் நயன்தாராவின் கால்ஷீட் டைரி இன்னும் சிலவருடங்களுக்கு நிரம்பி வழியப்போகிறது. 
 
நயன்தாராவையே பலரும் அவரது நடிப்பு திறமை முக்கிய காரணம். அறம் படத்தில் கலெக்டராக நயன்தாரா நடித்ததை பலரும் வெகுவாக பாராட்டினர். இதேபோல் நானும் ரவுடிதான் படத்தில் காதுகேளாத பெண்ணாக நடித்த நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கஞ்சா விற்பவராக நடித்த கோலமாவு  கோகிலா ஆகிய படங்கள் நயன்தாரவின் நடிப்பை உலகுக்கு வெளிகாட்டியது. 
 
வெறும் அழகு சிலையாக மட்டுமல்லாமல், நடிப்பால் தனி ஒரு ஆளாக படத்தை தாங்கிப்பிடிப்பவராக நயன்தாரா இருப்பதால், பெரும் கதாநாயகர்களும் அவரது  கால்ஷீட்டுக்கு காத்துகிடக்கிறார்கள். இதனால் அவருக்கு கோடிகளில் பணத்தை கொட்டிக்கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் நயன்தாரா படத்தின் கதையை மட்டுமே உறுதியாக நம்புகிறார்.கதை சூப்பர் என்றால் மட்டுமே ஒகே சொல்கிறார். அது புதுமுக இயக்குனராக இருந்தாலும் சரி... இதுதான் நயன்தாராவின் வெற்றிக்கு காரணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்