இருக்க நிலைமைக்கு இதெல்லாம் தேவையா? ஹீரோவாகும் கவுதம் மேனன்
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (18:48 IST)
பிரபல இயக்குனர் கவுதம் மேனன், ஒரு அறிமுக இயக்குனரின் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் கவுதம் மேனனுக்கு தனி இடம் உண்டு. காதலை மையப்படுத்தியே இவரது படம் வெளியாகும்.
தற்போது இவர் தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
இதற்கு முன்னர் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாக உள்ளார். இப்படம் குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் இயக்கத்தில் படங்களை நடித்துவிட்டு படம் வெளியாகாமல் நடிகர்கல் காத்துக்கொண்டிருக்கும் போது இவருக்கு இதெல்லாம் தேவையா என சில எதிர்மறை கருத்துக்களும் முன்வந்துள்ளது.