நடிகை ரன்யா ராவ் மீது சிபிஐ வழக்குப்பதிவு.. பின்னணியில் அரசியல்வாதிகள்?

Siva

ஞாயிறு, 9 மார்ச் 2025 (11:14 IST)
தங்கம் கடத்தியதாக நடிகை ரம்யா ராவ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது சிபிஐ தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துபாய், அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து தங்க நகைகளை கடத்தி வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், உண்மையை தனது வாக்குமூலத்தில் தெரிவித்து வருவதாக தெரிகிறது. இந்த வழக்கின் பின்னணியில் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனை அடுத்து, ரம்யா ராவோடு இணைந்து செயல்பட்டவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வருமான வருவாய் புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சிபிஐ நேற்றே தானாக முன்வந்து ரம்யா ராவ் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால், தங்கக் கடத்தலில் ஈடுபட்ட ரம்யா ராவின் பின்னணியில் இருப்பவர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணை மூலம் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜாமீன் கிடைத்தால், "எப்போது சமன் அனுப்பினாலும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன்" என்று ரம்யா ராவ் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்