இலங்கைக்கு திடீரென சென்ற ’கோட்’ படக்குழு.. விஜய்யும் சென்றாரா?

Siva
வெள்ளி, 31 மே 2024 (13:34 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் ஆனால் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு அதன் பின்னர் அந்த காட்சிகளை திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடத்தியதாகவும் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு தனது டெக்னீசியன் டீமுடன் இலங்கை சென்று இருப்பதாகவும் அங்கு உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அவர் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்படும் காட்சிகளை திருவனந்தபுரத்தில் எடுத்த காட்சிகளோடு இணைக்க இருப்பதாகவும் இந்த பயணத்தில் விஜய் உள்பட நடிகர் நடிகையர் யாரும் செல்லவில்லை என்றும் டெக்னீசியன் டீமுடன் வெங்கட் பிரபு சென்று உள்ளார் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தின் முக்கிய அப்டேட் வரும் என்றும் அனேகமாக டீசர் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இரவு பகலாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்