இதுவரை எலியும் பூனையுமாக அடித்து கொண்டிருந்த காயத்ரியும் ஓவியாவும் இன்றைய நிகழ்ச்சியின் முடிவின்போது கன்பெஃக்ஷன் அறையில் இருவரும் கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் விடுவது போன்று இன்றைய நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது.
கன்பெஃக்ஷன் அறையில் பிக்பாஸ் இருவரையும் மனம்விட்டு பேச வைத்து இருவரையும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்படி செய்துவிட்டதாகவும், அதன்பின்னர் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை காயத்ரியின் தாயார் கமல்ஹாசன் வீட்டுக்கு சென்று வருத்தப்பட்டதால் இதுவரை வில்லி போன்று தெரிந்த காயத்ரியின் ஸ்கிரிப்டை பிக்பாஸ் குழுவினர் மாற்றிவிட்டனர் போன்று தெரிகிறது. காயத்ரியும் ஓவியாவும் சேர்ந்ததில் கூட ஆச்சரியமில்லை, ஆனால் காயத்ரியை முழுவதுமாக நம்பியிருந்த ஜூலியின் கதி என்ன ஆகும் என்று நினைக்கும் போதுதான் வடிவேல் பாணியில் சிப்புசிப்பாய் வருது....