இயக்குனர் கௌதம் மேனன் திரையுலகிற்குள் அறிமுகமாகி இருபது ஆண்டுகளைக் கடந்துள்ளார். இப்போது கடுமையான பொருளாதார சிக்கல்களில் இருக்கும் அவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்தபேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான ரஜினி மற்றும் விஜய்க்கு என்ன மாதிரியான கதைகளை வைத்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் தனது முதல் படமான மின்னலே பற்றி பேசிய அவர் முதலில் மாதவன் மற்றும் அப்பாஸ் கதாபாத்திரங்கள் கல்லூரியில் நண்பர்களாக இருந்தது போலவும், பின்னர் கதாநாயகிக்காக அடித்துக் கொள்வது போலவும் வைத்திருந்தேன். ஆனால் மாதவன்தான் கல்லூரி காலத்திலேயே அவர்கள் எதிரிகளாக இருப்பது போல காட்டலாம் எனக் கூறினார். அது படத்தின் வெற்றிக்கு உதவியது எனக் கூறியுள்ளார்.