வாய்ஸ் என்பது கேட்டு பெறுவதல்ல: ரஜினி ஆதரவு குறித்து கமல்!

ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (19:57 IST)
வாய்ஸ் என்பது கேட்டுப் பெறுவதல்ல என்றும் தானாகவே வரவேண்டும் என்றும் ரஜினி ஆதரவு குறித்து கமல்ஹாசன் பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று நான்காவது ஆண்டு நிறைவு விழாவை கமல்ஹாசன் கட்சியினர் கொண்டாடினர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் 
 
அந்தப் பேட்டியின் போது அவர் கூறியபோது ’ரஜினி உள்பட யாராக இருந்தாலும் வாய்ஸ் என்பதை அவர்களாகவே கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுப் பெறுவதற்கு பெயர் வாய்ஸ் கிடையாது என்று கூறினார். ரஜினி வாய்ஸ் கொடுக்க நினைத்தால் அவர் தான் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
அதேபோல நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் கதவு திறந்தே இருக்கும் என்றும் சீமான் மற்றும் சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம் என்றும் மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்த அவர்களை எங்கள் கூட்டணியில்  ஏற்றுக் கொள்ளப் படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்