ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும், ஆரம்பிக்கவில்லை என்றாலும் அவரிடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனிடையே தேர்தல் நெருங்கும் சமயத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது.வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கமல், ரஜினியிடம் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க நட்பு ரீதியாகவே கமல் சென்றார் எனவும் கூறப்படுகிறது.