கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் பல படங்களில் நடித்தாலும் இன்னும் சொல்லிக்கொள்ளும் படியான ஹிட் ஒன்றை அவர் கொடுக்கவில்லை. இதையடுத்து இப்போது அவர் நடிப்பில் செல்லப்பிள்ளை என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மோஷன் போஸடர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழு.