சிவாஜிக்கும் விஜய்க்கும் இருக்கும் ஒற்றுமை ! இயக்குனர் கருத்து!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:25 IST)
இயக்குனர் சேரன் கதைக் கேட்பதில் விஜய்யும் சிவாஜியும் ஒரே மாதிரியானவர்கள் எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய தரமான படைப்புகளால் பிரபலமானவர் இயக்குனர் சேரன். பின்னர் அவர் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால் இப்போது இரண்டிலும் வாய்ப்புகள் இல்லாத நிலையில் தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்க்கு கதை சொல்லி அவரும் சம்மதம் தெரிவித்து பின்னர் அந்த படம் நடக்காமல் போனது குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘ஆட்டொகிராப் படத்துக்குப் பின்னர் விஜய்க்குக் கதை சொன்னேன். விஜய், நடிகர் சிவாஜியைப் போல எவ்வளவு நேரம் கதை சொன்னாலும், ஆடாமல் அசையாமல் நின்று கேட்பார். அந்த கதை அவருக்குப் பிடித்து தேதிகளும் கொடுத்தார். ஆனால் அப்போது நான் தவமாய் தவமிருந்து படத்தை இயக்கிக் கொண்டிருந்ததால் அந்த படத்தை இயக்க முடியாமல் போனது. அந்த படத்தை மட்டும் நான் இயக்கி இருந்தால் என் வாழ்க்கையே அடுத்தக் கட்டத்துக்கு சென்றிருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்