'பாகுபலி 2' படக்குழுவினர்களிடம் மன்னிப்பு கேட்ட கெளதமி

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (00:27 IST)
கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் கெளதமி. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சமீபத்தில் மீண்டும் 'பாபநாசம்' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார்.



 
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை கெளதமி சந்தித்தபோது, 'பாகுபலி 2' படம் எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு பதில் கூறியபோது, 'முதலில் பாகுபலி 2' படக்குழுவினர் என்னை மன்னிக்க வேண்டும். எனது மகளுக்கு தேர்வு இருந்ததால் அவருக்கு உதவியாக ஒருமாதம் நான் அவருகே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நான் இன்னும் பாகுபலி 2' படத்தை பார்க்கவில்லை
 
உலக அளவில் சாதனை செய்த இந்த படத்தை விரைவில் பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும் இந்திய சினிமாவில் பெரிய மைல் கல்லை எட்டியுள்ள படம் 'பாகுபலி 2' என்று அந்த படத்திற்கு புகழாரம் சூட்டினார்.
அடுத்த கட்டுரையில்