காக்க காக்க படத்தில் அஜித் நடிக்க மறுத்தார்: கவுதம் ஓபன் டாக்!!

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (14:26 IST)
கவுதம் மேனனுக்கு மட்டுமல்ல, சூர்யாவுக்கும் ஒரு டர்னிங் பாயிண்ட் காக்க காக்க படம்.


 
 
கவுதம் மேனன் முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க அணுகியது அஜித்திடம் தான். அப்போது அஜித் நடிக்க மறுத்துவிட்டார். 
 
அதன்பின் ஜோதிகா ரெகமெண்டேஷனில் சூர்யாவை கௌதம் மேனம் பாதி மனதுடன் ஹீரோவாக தேர்தெடுத்தார். சூர்யா, அப்போது தான் பாலாவின் படம் முடித்து வந்ததால் நன்றாகவே நடித்துவிட்டார்.
 
ஏன் அஜித் நடிக்கவில்லை என்பதை இப்போது சொல்லியுள்ளார் கவுதம் மேனன். இப்போது தனக்கு போலீஸ் கேரக்டர் நன்றாக இருக்காது என்று கூறி நடிக்க மறுத்துவிட்டாராம் அஜித். 
 
ஆனால், கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் அஜித் போலீஸாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

 
அடுத்த கட்டுரையில்