முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் கௌதம் மேனன்? – டான் பட அப்டேட்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (13:45 IST)
சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தின் அவருடன் கௌதம் மேனனும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கி வரும் திரைப்படம் டான். இந்த படத்தில் சூரி, சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் கெஸ்ட் ரோல் ஒன்றில் இயக்குனர் கௌதம் மேனன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கௌதம் மேனன் – சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்