150 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய டான்ஸ் மாஸ்டர் – வைரல் புகைப்படம்!

வியாழன், 17 டிசம்பர் 2020 (10:54 IST)
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா தனது உடல் எடையை பாதியாக குறைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் பட்டாசாய் நடனம் அமைக்கும் நடன இயக்குனர்களில் கணேஷ் ஆச்சார்யாவும் ஒருவர். அவரின் மற்றொரு சிறப்பம்சன் 150 கிலோவுக்கு மேல் உள்ள அவரது பருமனான உடலை வைத்துக் கொண்டு அவர் எல்லா கடினமான நடன அசைவுகளையும் எளிதில் ஆடுபவர். இதை நடன இயக்குனர் பிரபுதேவா கூட பலமுறை பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்தி தனது உடல் எடையை பயங்கரமாகக் குறைத்துள்ளார் கணேஷ் ஆச்சார்யா. கிட்டத்தட்ட 50 கிலோ எடை குறைத்துள்ள அவரின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்