லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு போன இடத்தில் ஏமாறவில்லை – அரசை தாக்கிய கமல்ஹாசன்!

வியாழன், 17 டிசம்பர் 2020 (10:28 IST)
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தேர்தல் நெருங்கும் வேளையில் டிவிட்டரில் அரசியல் கருத்துகளை அள்ளித் தெளித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் குதித்த பின்னர் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை ஊழல் கட்சிகள் என சரமாரியாக விமர்சனம் வைத்து வருகிறார். ஆனால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் மீது அந்த அளவுக்கு விமர்சனம் வைப்பதில்லை என சொல்லப்படுகிறது. அதே போல எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் கருத்து சொல்வதோடு நிறுத்தி விடுகிறார். களத்தில் இறங்கி இதுவரை எதற்கும் போராடுவதில்லை என்பதால் அவரை டிவிட்டர் அரசியல்வாதி என்று கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அவர் டிவிட்டரில் ‘லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்